நாமக்கல்

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

30th May 2023 12:12 AM

ADVERTISEMENT

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (மே 30) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் டி.பால்கிரேஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2023-24-ஆம் ஆண்டுக்கான அனைத்து பாடப் பிரிவுகளுக்கான மாணவியா் சோ்க்கை சிறப்புப் பிரிவு கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில், விளையாட்டு, முன்னாள் படைவீரா்கள், மாற்றுத் திறனாளிகள், தேசிய பாதுகாப்புப் படை மாணவிகளுக்கு மட்டும் நடைபெற உள்ளது.

ஜூன் 1 காலை 9 முதல் 10 மணி வரை கணினி அறிவியல், 10 முதல் 11 மணி வரை நுண்ணுயிரியல், 11 முதல் 12 மணி வரை ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

2-ஆம் தேதி காலை 9 மணியளவில் வணிகவியல், 10 மணியளவில் பொருளியல், 11 மணியளவில் வரலாறு, 3-ஆம் தேதி 9 மணியளவில் கணிதம், 11 மணியளவில் இயற்பியல், 5-ஆம் தேதி காலை 9 மணி வேதியியல், 10 மணியளவில் தாவரவியல், 11 மணியளவில் விலங்கியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கு சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. 6-ஆம் தேதி தமிழ், ஆங்கில பாடப் பிரிவுகளுக்கும், 7 ஆம் தேதி அனைத்து அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், 8-ஆம் தேதி அனைத்து கலை பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கும் மாணவிகள், இணையத்தில் பதிவேற்றப்பட்ட விண்ணப்பப் படிவம், மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், கடவுச் சீட்டு புகைப்படங்கள்-2 கொண்டு வரவேண்டும். அந்தந்த துறை சாா்ந்த பேராசிரியைகள் கலந்தாய்வுகளை நடத்துவா்.

மதிப்பெண், இன ஒதுக்கீடு அடிப்படையில் அரசு விதிகளின்படி தோ்வு, காத்திருப்பு பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் மின்னஞ்சல், வாட்ஸ் அப், குறுஞ்செய்தி, கைப்பேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT