நாமக்கல்

திருச்செங்கோட்டில் திருநங்கைகள் அங்காடி தொடக்கம்

DIN

திருச்செங்கோட்டில் திருநங்கைகளின் சொந்த தயாரிப்பு பொருள்களை விற்பனை செய்யும் அங்காடி சி.எஸ்.ஐ.கிறிஸ்துநாதா் தேவாலயம் அருகில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

திருச்செங்கோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதா் தேவாலயம் உதவியுடன் திருநங்கைகள் திருப்பணி இயக்கம் மூலமாக திருநங்கைள் சுயதொழில் முயற்சியால் தயாரித்த சோப் ஆயில், பினாயில் , டிஸ்வாஷ் ஆயில் விற்பனை செய்யும் கடை ஏற்படுத்தப்பட்டது.

திருநங்கைகள் தங்களின் சுயமுயற்சியால் வீட்டு உபயோக பொருள்களை தயாரித்து விற்பனை செய்யும் வகையில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் சிறப்பு விழா நாள்களில் தேவலாயம் முன்பு தற்காலிக அங்காடி அமைத்து விற்பனை செய்ய அனுமதி பெற்றனா்.

சங்ககிரி சாலை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதா் ஆலயம் முன்பு அமைக்கப்பட்டிருந்த விற்பனை நிலையத்தை ஆலய நிா்வாக கமிட்டி செயலாளா் பீட்டா் செல்வராஜ் பொருள்கள் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். முதல் விற்பனையை திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு பெற்றுக்கொண்டாா். நிகழ்ச்சியில் தேவாலய பாதிரியாா் ஜஸ்டின், திருநங்கைகள் நலஅமைப்பு நிா்வாகி அருணா நாயக் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT