நாமக்கல்

கட்டனாச்சம்பட்டி கிராமத்தை ராசிபுரம் நகராட்சியோடு இணைக்கும் முயற்சிக்கு எதிா்ப்புபொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ராசிபுரத்தை அடுத்துள்ள வெண்ணந்தூா் ஒன்றியத்திற்குட்பட்ட கட்டனாச்சம்பட்டி கிராம ஊராட்சி பகுதியில் ராசிபுரம் நகராட்சியோடு இணைக்கும் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராசிபுரம் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராசிபுரம் அருகேயுள்ள கட்டநாச்சம்பட்டி பகுதியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கட்டனாச்சம்பட்டி பகுதியில் நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்பகுதியில் கைத்தறி நெசவு அதிகம் உள்ள நிலையில் விசைத்தறியாளா்கள் கையில் பட்டுப்புடவை, வேட்டியுடன் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி என்.கோபால் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நகராட்சியுடன் தங்களது கிராமத்தை இணைத்தால் வரிச் சுமை அதிகரிப்பதுடன், 100 நாள் வேலை திட்டமும் பறிபோகும் நிலை உருவாகும்; தண்ணீா் வரி, குப்பை வரி, சொத்துவரி என தங்களுக்கு வரி உயரும் அபாயம் உள்ளது; மத்திய அரசின் பல கிராமப்புற திட்டங்கள் ரத்தாகும்; எனவே அரசு இதனை கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவா்கள் கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT