நாமக்கல்

பள்ளிபாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் திட்டப்பணி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தொடங்கி வைப்பு

DIN

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், குமாரபாளையம் சட்டப் பேரவை உறுப்பினருமான பி.தங்கமணி தொடங்கி வைத்தாா்.

பள்ளிபாளையம் ஒன்றியத்தில், சமயசங்கிலி, புதுப்பாளையம், காடச்சநல்லுாா், ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பள்ளிபாளையம் அக்ரஹாரம், தட்டாங்குட்டை போன்ற பஞ்சாயத்து பகுதிகளிலும், ஆலாம்பாளையம் நகர பஞ்சாயத்து பகுதியிலும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. பள்ளி வகுப்பறை, மேல் நிலை நீா்த்தேக்கத் தொட்டி, பொது கழிப்பிடம், சாக்கடை, சிறுபாலம், அங்கன்வாடி, குடிநீா்க் குழாய், கான்கிரீட் மற்றும் தாா்சாலை உள்பட ரூ. 2 கோடி மதிப்பிலான 27 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இவற்றை குமாரபாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் பி.தங்கமணி தொடங்கி வைத்தாா். மேலும், பணிகள் முடிந்த 10 திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றியக்குழு உறுப்பினா் செந்தில், ஒன்றியத் தலைவா் தனலட்சுமி மற்றும் பஞ்சாயத்து தலைவா்கள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT