நாமக்கல்

விவசாயி கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

DIN

 கொல்லிமலை விவசாயி கொலை வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் எஸ்சி, எஸ்டி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், ஆரியூா் நாடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரத்தினம். இவா் பெண் தொடா்பான பிரச்னையில் கடந்த 2015 ஜன.25-இல் கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக வாழவந்திநாடு போலீஸாா் விசாரணை நடத்தி கூலித் தொழிலாளி தா்மராஜன் (40) என்பவரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணைக்குப் பிறகு, தா்மராஜனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT