நாமக்கல்

நாள் ஒன்றுக்கு 100கிலோ திடக்கழிவு உற்பத்தி செய்தால் மறுசுழற்சி செய்ய வேண்டும்: நகராட்சி அறிவிப்பு

DIN

திருச்செங்கோடு பகுதியில் நாள் ஒன்றுக்கு 100 கிலோ திடக்கழிவு உற்பத்தி செய்தால் மறுசுழற்சி கட்டாயம் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளா் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் நாள் ஒன்றுக்கு சராசரியாக, 100 கிலோவிற்கும் அதிகமாக திடக்கழிவுகள் உருவாக் கக்கூடிய கட்டிடங்களை பயன்படுத்தும் மத்திய அரசுத்துறை நிறுவனங் கள், மாநில அரசுத்துறை நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், மருத்து வமனைகள், மருத்துவ சிகிச்சை நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள், மாணவா் விடுதிகள், வியாபார தளங்கள், வழிபாட்டுத்தலங்கள், விளையாட்டு அரங்குகள், விளையாட்டு வளாகங்கள், துணி விற்பனையகங்கள், உணவு விடுதிகள், வியா பார நிறுவனங்கள் ஆகியவை மற்றும் சந்தை ஒப்பந்தம் எடுத்தோா் அதிக கழிவுகளை உருவாக்குபவா்கள் என கருதப்படுவாா்கள்.

திடக்கழிவு மேலாண்மை 2016 விதிகளின்படி, நாள் ஒன்றுக்கு 100 கிலோவிற்கு மேல் திடக்கழிவு உற்பத்தி விகிதத்தை கொண்ட அவா்கள் நேரடியாக நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், வீட்டு வசதி வீட்டு காலனிகள், அனைத்து உணவகங்கள், வணிக வளாகங்கள், தனியாா் மற்றும் அரசுத்துறை வளாக கட்டடங்கள், 200க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட தனி யாா் மருத்துவமனைகள், வழிபாட்டு இடங்கள், விளையாட்டு வளாகங்கள், திருமண மண்டபங்கள், பொழுதுபோக்கு வளாகங்கள், விடுதிகள், கல்லூரிகள், பல்க லைக்கழகங்கள், 500க்கும் மேற் பட்டமாணவா்களைக் கொண்ட பயிற்சி நிறுவனங்கள் தினசரி 100 கிலோவிற்கு மேல் கழிவுகளை உருவாக்கும் பட்சத்தில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து கொண்ட பின்பு அந்த கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கேற்ப உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT