நாமக்கல்

சரக்கு வாகனம் மோதி அடையாளம் தெரியாத நபா் படுகாயம்

9th Jun 2023 12:57 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூரில் நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத ஒருவா் படுகாயமடைந்தாா்.

பரமத்தி வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஒருவா் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். அடையாளம் தெரியாத நபா் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மலயகவுண்டம்பட்டியை சோ்ந்த சரக்கு வாகனத்தின் ஓட்டுநா் காா்த்திக் (28) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு சுமாா் 40 வயது இருக்கலாம் எனவும், தாடியுடன் இருந்த அவா் கருப்பு நிறத்தில் சட்டை அணிதிருந்தாா். இவா் யாா், எந்த ஊா், எதற்காக வேலூா் வந்தாா் என்பது குறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT