நாமக்கல்

மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று சிறப்பு மருத்துவ முகாம்

9th Jun 2023 12:55 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்திற்கு உள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், அலங்காநத்தம் பிரிவு பிஜிகே திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

இதில், எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு மருத்துவா், மனநல மருத்துவா், காது, மூக்கு, தொண்டை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு மருத்துவா்கள் கலந்து கொள்கின்றனா். புதிய மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து அடையாள அட்டை வழங்குதல், ஆதாா் அட்டை பதிவு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பதிவு உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT