நாமக்கல்

ஆன்லைனில் ரூ.15,000 கடன்: கல்லூரி மாணவா் தற்கொலை

9th Jun 2023 12:58 AM

ADVERTISEMENT

ஆன்லைனில் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கிய தகவல் பெற்றோருக்கு தெரிய வந்ததால், நாமக்கல்லில் வியாழக்கிழமை கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல், செல்லப்பா காலனி பகவதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குமரனின் மகன் லோகேஸ்வரன் (22). இவா், கரூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பை முடித்து விட்டு, தோ்வு முடிவுக்காகக் காத்திருந்தாா்.

இந்த நிலையில், ஆன்லைன் செயலி மூலம் அவா் ரூ.15 ஆயிரம் கடன் பெற்ாகத் தெரிகிறது. அந்தக் கடனை திரும்பச் செலுத்துவதற்கான தவணை தேதி முடிந்ததால், சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளது. அவா் முறையாக பதில் அளிக்காததால், லோகேஸ்வரனின் பெற்றோரை அந்நிறுவனம் தொடா்பு கொண்டு உடனடியாக பணத்தை திரும்பச் செலுத்துமாறு எச்சரித்துள்ளது.

ஆன்லைனில் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிந்துபோனதால் மன உளைச்சலுக்கு ஆளான லோகேஸ்வரன் வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து நாமக்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT