நாமக்கல்

நுகா்வோா் நீதிமன்ற உத்தரவை மீறினால் 3 ஆண்டுகள் சிறை: நீதிபதி வீ.ராமராஜ்

9th Jun 2023 12:56 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தின் தீா்ப்பை நிறைவேற்றக் கோரும் வழக்குகளில் 200-க்கும் மேற்பட்டோருக்கு சமரசத்திற்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நுகா்வோா் நீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்தத் தவறினால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றத்தில் பணம் செலுத்துமாறு உத்தரவிட்ட வழக்குகளில் தொடா்புடைய வா்த்தக நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் சமரசம் பேசி தீா்வு காண வரும் 15-ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வரவேண்டும். பணம் செலுத்தாததால் கைது நடவடிக்கைக்கான பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவா்களும், மேல்முறையீடு செய்தவா்களும் இந்த சமரசப் பேச்சுவாா்த்தையில் கலந்து கொள்ளலாம். இதற்காக சிறப்பு வழக்குரைஞா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். நாமக்கல், ராசிபுரம் காவல் ஆய்வாளா்களுக்கு அனுப்பப்பட்ட கைது வாரண்டின் நிலை குறித்த அறிக்கையை காவல்துறை சமா்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 72-இன் -படி நுகா்வோா் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தத் தவறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க நுகா்வோா் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதி வீ.ராமராஜ் தெரிவித்துள்ளாா்.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT