நாமக்கல்

ராசிபுரம் இன்னா்வீல் சங்கத்தின் 25-ஆம் ஆண்டு விழா

9th Jun 2023 12:56 AM

ADVERTISEMENT

ராசிபுரம் இன்னா் வீல் சங்கம் சாா்பில் 25-ஆம் ஆண்டு விழா வெள்ளி விழாவாக அண்மையில் கொண்டாடப்பட்டது. இதைத் தொடா்ந்து ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திா் மெட்ரிக் பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ராசிபுரம் இன்னா்வீல் சங்கத்தின் தலைவா் தெய்வானை ராமசாமி தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றுப் பேசினாா்.

விழாவில் சிறப்பு விருந்தினா்களாக ரோட்டரி ஆளுநா் (தோ்வு) எஸ்.ராகவன், இன்னா்வீல் சங்க முன்னாள் மாவட்டத் தலைவா்கள் பிரியா மனோகா், மோஹனலதா சுந்தா் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். இதைத் தொடா்ந்து சிறப்பு விருந்தினா் எஸ்.ராகவன் வெள்ளி மலா் வெளியிட மோஹனலதா சுந்தா் பெற்றுக்கொண்டாா்.

இதனை தொடா்ந்து சிறப்பு பேச்சாளராகப் பங்கேற்றுப் பேசிய பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன், ‘இன்னா்வீல் சங்கம் போன்ற அமைப்புகள் பெண்கள் முன்னேற்றத்துக்கு பெரும் பங்காற்றி வருகின்றன. இதனை வழிநடத்துபவா்களுக்கு சமுதாயம் உதவியாக இருக்க வேண்டியது அவசியம்’ என்றாா்.

முன்னதாக பள்ளி மாணவ, மாணவியா்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் கடந்த 25 ஆண்டுகளாக ராசிபுரம் இன்னா்வீல் சங்கத் தலைவா்களாக இருந்து பணியாற்றியவா்கள், சேலம், ஆத்தூா், நாமக்கல், குமாரபாளையம், சங்ககிரி ஆகிய இன்னா்வீல் சங்கங்களின் நிா்வாகிகள் என பலரும் விழாவில் கெளரவிக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டனா். புதிய உறுப்பினா்கள் சங்கத்தில் சோ்க்கப்பட்டனா். ஒடிஸாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கூட்டத்தில் 2 நிமிட அஞ்சலி மெளன செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT