நாமக்கல்

ரூ. 30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

7th Jun 2023 12:14 AM

ADVERTISEMENT

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 30 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்-- திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மொத்தம் 1,550 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 4,780 முதல் ரூ. 7,480 வரையிலும், மட்ட ரகம் ரூ. 2,669 முதல் ரூ. 4,400 வரையிலும் விற்பனையானது. ஏலத்தில் மொத்தம் ரூ. 30 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT