நாமக்கல்

ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

7th Jun 2023 12:10 AM

ADVERTISEMENT

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருச்செங்கோட்டை அடுத்த வையப்பமலையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு வாலிபா் சங்க ஒன்றியச் செயலாளா் ஆா்.சக்திவேல் தலைமை வகித்தாா். ஒன்றிய உதவி செயலாளா் ப.விஜய், ஒன்றிய துணைத் தலைவா் வேலு, வையப்பமலை கிளை தலைவா் மோகனப் பிரியா, ஒன்றிய குழு உறுப்பினா்கள் ஈஸ்வரன் லட்சுமி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். ஜனநாயக வாலிபா் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளா் சு.சுரேஷ், சிஐடியூ தலைவா்கள் கே.எஸ்.வெங்கடாசலம், வி.தேவராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT