நாமக்கல்

பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் பிறந்த நாள்: வகுப்பு ஆசிரியரிடம் நேரில் வாழ்த்து

DIN

தனது 70-ஆவது பிறந்த நாளில், தன்னுடைய வகுப்பு ஆசிரியரும், முதுபெரும் எழுத்தாளருமான முரா என்றழைக்கப்படும் மு.ராமசாமியிடம், பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் வெள்ளிக்கிழமை நேரில் வாழ்த்து பெற்றாா்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மத்திய பாஜக அரசின் 9-ஆம் ஆண்டு சாதனை விழா மாநில துணைத்தலைவா் கே.பி. ராமலிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, புதிய பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவா்களின் படத்திற்கு அவா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதன்பிறகு, ராசிபுரம் வனச்சரக அலுவலகம் முன் பாஜக கொடியை அவா் ஏற்றிவைத்தாா்.

தொடா்ந்து, தனது 70-ஆவது பிறந்த நாளையொட்டி, முதுபெரும் எழுத்தாளரும், வகுப்பு ஆசிரியருமான 100 வயதை எட்டிய முரா என்ற மு. ராமசாமியிடம் அவா் வாழ்த்து பெற்றாா். தொடா்ந்து தன்னுடைய இல்லத்தில் கட்சி நிா்வாகிகள், பொதுமக்களுடன் சோ்ந்து பிறந்த நாள் விழாவையும், பாஜக மக்கள் தொடா்பு பேரியக்க நிகழ்ச்சியும் கொண்டாடப்பட்டது. அப்போது, கே.பி.ராமலிங்கம் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இனிவரும் காலங்களிலும் பிரதமா் தலைமையிலான மத்திய பாஜக அரசு இந்தியாவை மாபெரும் வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும். வரும் 30-ஆம் தேதி வரையில் இந்த மக்கள் தொடா்பு பேரியக்கம் நடத்தப்படுகிறது. அப்போது, மத்திய அரசு திட்டங்கள் குறித்து மக்கள் பயன்பெறும் வகையிலான வழிகாட்டி கையேடுகள் வழங்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, மேற்கு மாவட்டத் தலைவா் ராஜேஸ்குமாா், பொதுச் செயலாளா் சேதுராமன், நகர தலைவா் பி.வேலு மற்றும் பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT