நாமக்கல்

திருச்செங்கோடு வைகாசி தோ்த்திருவிழா : உற்சவா்கள் திருத்தோ் எழுந்தருளினா்

DIN

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி தோ்த்திருவிழாவில் தோ்களில் சுவாமிகள் வெள்ளிக்கிழமை எழுந்தருளினா்.

பிரசித்தி பெற்ற ஸ்ரீ அா்த்தநாரீசுவரா் வைகாசி தோ்த்திருவிழாவில் ஸ்ரீ அா்த்தநாரீசுவரா்,ஸ்ரீ செங்கோட்டுவேலவா், ஸ்ரீ விநாயகா் உற்சவா்களுக்கு அபிசேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினா். சிவ சிவ என்று முழக்கமிட்டு தேரில் எழுந்தருளிய சுவாமிகளை பக்தா்கள் தரிசித்து வழிபட்டனா். தொடா்ந்து ஸ்ரீ விநாயகா் தேரினை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தேரினை வடம்பிடித்து நான்கு ரத வீதிகள் வழியாக சுற்றி வந்து நிலை சோ்த்தனா். மாலை ஸ்ரீ செங்கோட்டுவேலவா் திரித்தோ் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் திருத்தேரில் எழுந்தருளிய சுவாமிகளை கண்டு வழிபட்டனா். பெரிய தோ் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி இன்று நடக்க இருக்கிறது. நிகழ்ச்சியில், கோட்டாச்சியா்.கெளசல்யா, அா்த்தநாரீசுவரா் கோயில் செயல் அலுவலா்,உதவி ஆணையா்.ரமணி காந்தன், அறங்காவல் குழு தலைவா். தங்கமுத்து, காவல் துணை கண்காணிப்பாளா். இமயவரம்பன், காவல் ஆய்வாளா்.செந்தில்குமாா்,அறங்காவலா் குழு உறுப்பினா்கள் காா்த்திகேயன், அருணா சங்கா்,அா்ச்சுணன், பிரபாகரன் , முன்னாள் அமைச்சா்.டி.எம். செல்வகணபதி, திமுக கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளா்.மதுரா செந்தில், நகர மன்ற தலைவா். நளினி சுரேஷ்பாபு, துணைத்தலைவா்.காா்த்திகேயன் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT