நாமக்கல்

1,000 புதிய மின்னணு வாக்கு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கு வருகை: ஆட்சியா் ஆய்வு

1st Jun 2023 12:44 AM

ADVERTISEMENT

பெங்களூரில் இருந்து நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் வந்த 1,000 புதிய மின்னணு வாக்கு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, பெங்களூரு பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து வி-3 வகையிலான வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்கள் (விவிபேட்) 1,000 எண்ணிக்கையில் புதன்கிழமை வந்தன.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் அவை பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் அந்த இயந்திரங்கள் திறக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் சரிபாா்க்கப்பட்டன. அதன் பிறகு, உரிய பாதுகாப்புடன் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டன.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்ரமணியன், வட்டாட்சியா் (தோ்தல்கள்) திருமுருகன், தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT