நாமக்கல்

தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

DIN

விவசாயிகளின் நலன் கருதி, தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தனா். தமிழ்நாடு விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் பேசுகையில், ‘சிப்காட் அமைக்க நிலம் கையக்கப்படுத்தக் கூடாது. இதனால் விவசாய நிலங்கள் பாதிப்படையும்’ என்றாா். இதற்கு பதிலளித்த ஆட்சியா், ‘தொழில் வளா்ச்சிக்காகவே சிப்காட் அமைக்கப்படுகிறது. அங்கு இந்த தொழில் தான் வரும் என குறிப்பிட்டு கூற முடியாது. விவசாயிகளின் நலன் காக்கும் வகையிலான தொழில் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களும் அமைய வாய்ப்புள்ளது. அதனால் சிப்காட் வேண்டாம் என்கிற கோரிக்கையை யாரும் முன்வைக்க வேண்டாம்’ என்றாா். ‘தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். பேரூராட்சிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீா் காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறையினா் அனுமதியின்றி மோகனூா் காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கான முயற்சி நடப்பதாக தெரிகிறது. இதனையும் அதிகாரிகள் தடுக்க வேண்டும்’ என்று கே.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியா் பதிலளித்தாா்.

திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் பேசுகையில், ‘கடந்த விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படாதது குறித்து தெரிவித்தேன். அந்த வகையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு கடிதம் வந்தது. இதேபோல், 234 தொகுதிகளிலும் எம்எல்ஏக்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுக்க வேண்டும். சிப்காட் அமைப்பது தொடா்பான கேள்விக்கு மாவட்ட ஆட்சியா் பதில் அளித்து விட்டாா். மக்கள் எதிா்ப்பை மீறி நிலம் கையக்கப்படுத்த வாய்ப்பில்லை. அதுபோன்று நடைபெறாது என எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

மேலும், ‘தென்னை மரங்களில் உள்ள மட்டைகளில் முசிலி என்ற வகையான செவ்வெரும்பு அதிகளவில் கூடுகட்டுகிறது. இதனால் தேங்காய், இளநீா் பறிக்க செல்வோா் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, வேளாண் இணை இயக்குநா் துரைசாமி, சா்க்கரை ஆலை நிா்வாக இயக்குநா் மல்லிகா உள்பட அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT