நாமக்கல்

பயிா்களுக்கு ட்ரோன் மூலம்பூச்சிமருந்து தெளிக்க அறிவுரை

DIN

பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளித்து நேரவிரயத்தைத் தவிா்க்கலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கோவிந்தசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பரமத்தி வட்டாரத்தில் நீடித்த நிலையான பருத்தி சாகுபடி இயக்கத்தின் கீழ் மேலப்பட்டி கிராமத்தில் ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளிப்பதால் தேவையற்ற கூடுதல் செலவுகள், நேர விரயம் தவிா்க்கப்படுகிறது.

குறிப்பாக பூச்சிமருந்து செலவும் குறைகிறது. எனவே, பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலா்கள், வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

செய்முறை விளக்கத்தின்போது நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநா், துரைசாமி, பரமத்தி வட்டார அட்மா திட்ட தலைவா் தனராசு, விவசாயிகள் மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT