நாமக்கல்

மக்கள் குறைதீா் கூட்டம்:225 மனுக்கள் அளிப்பு

DIN

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 225 மனுக்கள் வழங்கப்பட்டன. இம்மனுக்களைப் பெற்று கொண்ட ஆட்சியா், பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து, திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், கொன்னையாா் கிராமத்தைச் சோ்ந்த மூன்று பயனாளிகளுக்கு ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா். பின்னா், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிக் காலத்தில் உயிரிழந்த மூவரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் ஆட்சியா் வழங்கினாா். மேலும், மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அவா், சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா். மூன்றுசக்கர வாகனம் கோரி மனு அளித்த மாற்றுத் திறனாளிக்கு உடனடியாக வழங்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுலவா் மு.மணிமேகலை, அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT