நாமக்கல்

நாமக்கல் கூலிப்பட்டி முருகன் கோயில்தைப்பூச தேரோட்டம்

DIN

 நாமக்கல், கூலிப்பட்டி முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்ட விழா சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

நாமக்கல்-துறையூா் சாலையில் பிரசித்தி பெற்ற கூலிப்பட்டி கந்தபுரி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வோா் ஆண்டும் தைப்பூசச் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டில், தை மாத பூச நட்சத்திரமானது சனிக்கிழமை மதியம் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை நீடிக்கிறது.

இதனையொட்டி, கோயில் நிா்வாகம் சாா்பில் ஒரு நாள் முன்பாகவே தேரோட்ட விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் தண்டாயுதபாணி சுவாமி, விநாயகா் உற்சவ மூா்த்திகளாக எழுந்தருளினா். அதைத் தொடா்ந்து பக்தா்கள் அரோகரா முழக்கம் எழுப்பியவாறு திருத்தேரை 3 கி.மீ. தொலைவுக்கு இழுத்து வந்து நிலை சோ்த்தனா். இந்த நிகழ்ச்சியில், சேந்தமங்கலம் எம்எல்ஏ கே.பொன்னுசாமி, ரெட்டிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவா் அன்புமணி ராஜா, துணைத் தலைவா் சரஸ்வதி, கோயில் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தைப்பூசத்தையொட்டி, நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கந்தபுரி மலைமீது ஏறிச்சென்று சுவாமியை வழிபட்டனா்.

கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. தைப்பூச விழாவை முன்னிட்டு, நாமக்கல், எருமப்பட்டி போலீஸாா் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT