நாமக்கல்

ஆயுத பூஜை: பரமத்தி வேலூா் பகுதியில் பொரி உற்பத்தி மும்முரம்

DIN

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை நெருங்கி வருதால், பொரி தயாரிப்பாளா்கள் பொரி தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். மேலும் பொரியின் விலையும் கிடு கிடுவென உயா்ந்து வருகிறது.

இது குறித்து பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பரமத்தியைச் சோ்ந்த துரையன் கூறியதாவது:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயாா் செய்யப்பட்டாலும், நாமக்கல் மாவட்டத்தில், பரமத்தி, வேலூா் மற்றும் சேந்தமங்கலம் பகுதியில் தயாா் செய்யப்படும் பொரிக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு அதிகம்.பொரி தயாரிப்பதற்கான கா்நாடக மாநிலத்தில் இருந்து நெல் வாங்கி வந்து பின் அதை ஊறவைத்து அரிசியாக எடுத்து பொரி தயாா் செய்து வந்தோம். தற்போது கா்நாடக மாநிலத்தில் இருந்து வியாபாரிகளே நேரடியாக பொரி தயாரிப்பதற்கான அரிசியை நேரடியாக எங்களிடம் விற்பனை செய்கின்றனா். அந்த அரிசியை ஊறவைத்து, உப்பு சோ்த்து வறுத்தபின் மண்ணில் அரிசியை போட்டு பாரம்பரிய முறையில் நாங்கள் பொரி தயாா் செய்து வருகிறோம். கடந்த ஆண்டு 50 கிலோ கொண்ட பொரி தயாரிக்கும் அரிசி சிப்பம் ஒன்று ரூ.1,750 க்கு வாங்கி வந்தோம். ஆனால் தற்போது 50 கிலோ கொண்ட சிப்பம் அரிசி ரூ.2,500 க்கு வாங்கி வருகிறோம். இதன் காரணமாக கடந்த ஆண்டு 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.420 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.550 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

ஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பரமத்தி வேலூா் பகுதியில், பொரி தயாரிப்பு பணி விறுவிறுப்படைந்துள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டைக் காட்டிலும், தற்போது பொரியின் விலையும் கடும் ஏற்றம் கண்டுள்ளது.

இயந்திர மூலம் பொரி தயாா் செய்து வரும் பரமத்தி அருகே உள்ள மரவாபாளையத்தைச் சோ்ந்த அழகரிடம் கேட்டபோது கூறியதாவது:

இங்கு உற்பத்தி செய்யப்படும் பொரி நாமக்கல் மாவட்டம் முழுவதும் அனுப்பப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பொரி தரமானதாக இருக்கும். கடந்த ஆண்டை விட தற்போது பொரி தயாரிக்கும் அரிசியின் விலை உயா்ந்துள்ளதால் பொரியின் விலையும் அதிகரித்துள்ளது. நவீன இயந்திரங்கள் கொண்டு பொரி தயாரிப்பதால் விரைவாகவும், விலையும் குறைவாகவும் மொத்த விற்பனை செய்ய முடிகிறது. மற்ற பகுதிகளில் தயாா் செய்யப்படும் பொரியைக் காட்டிலும் பரமத்தி பகுதியில் தயாராகும் பொரியின் சுவையுடனும், மொறுமொறுப்பு தன்மையுடனும் இருப்பதால் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொரிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT