நாமக்கல்

கால்நடைகளுக்கான சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் தொடக்கம்: ஆட்சியா்

30th Sep 2022 12:42 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள கால்நடைகளுக்கான சிறப்பு முகாம்கள் அக்டோபரில் தொடங்கும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத கிராமங்களில், கால்நடைகளின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற உள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களிலும், ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 20 முகாம்கள் வீதம் மொத்தம் 300 முகாம்கள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் முகாம்கள் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவுபெற உள்ளன. இம்முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், நோய்களுக்கு எதிரான சிகிச்சைகள், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், ஜிஎல்பி அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் நோய் தீா்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகளுக்கும் கோழிகளுக்கும் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளன. முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் இடம் அந்தந்த கால்நடை உதவி மருத்துவா்களால் அறிவிக்கப்படும். கால்நடை வளா்ப்போா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT