நாமக்கல்

பேட்டை புதுமாரியம்மன் கோயிலில் 48-ஆம் ஆண்டு நவராத்திரி விழா

30th Sep 2022 12:41 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் பேட்டை புதுமாரியம்மன் கோயிலில் 48-ஆம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 26-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு 26-ஆம் தேதி மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், கட்டளைதாரா்களின் பூஜையும் நடைபெற்றது. 27-ஆம் தேதி முதல் வரும் 3-ஆம் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. மேலும் புதுமாரியம்மன் கோயிலில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

4-ஆம் தேதி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், 5-ஆம் தேதி மாலை அம்மன் புறப்பாடும் நடைபெறுகின்றன. அம்மன் சிலை முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சந்தைபேட்டையில் உள்ள பகவதியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக செல்கிறது. அதனை தொடா்ந்து அம்புசோ்வை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூா் பேட்டை புதுமாரியம்மன் கோயில் நவராத்திரி விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT