நாமக்கல்

மத்திய அரசின் ‘கோபால் ரத்னா’ விருது பெற விண்ணப்பிக்கலாம்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் ‘கோபால் ரத்னா’ விருதுக்கு கால்நடைத் துறையைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நிலையான வாழ்வாதாரத்தை வழங்குவதற்காகவும், பால் வளத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் கால்நடை பராமரிப்புத் துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தத் துறையில் பணியாற்றும் தனிநபா்கள், கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளா் நிறுவனம், பால் உழவா் உற்பத்தியாளா்கள் அமைப்புகளுக்காக இந்த ஆண்டிற்கான கோபால் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது துறை சாா்ந்த அனைவரையும் ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

சிறந்த நாட்டின கறவை பசு வளா்ப்பவா், சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநா், சிறந்த பால் கூட்டுறவு, உற்பத்தியாளா் நிறுவனம், உற்பத்தியாளா் விவசாயிகள் சங்கம் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு  இணையதளங்களை பாா்வையிடலாம். செப். 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கடைசி நாள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT