நாமக்கல்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 254 மனுக்கள்

DIN

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது.

இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 254 மனுக்கள் வழங்கப்பட்டன. இவற்றை பெற்றுக் கொண்ட ஆட்சியா் உரிய அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

அதனைத்தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகளை நேரடியாக சந்தித்து அவா்களது குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) க.ரா.மல்லிகா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் ஜெ.தேவிகாராணி உள்பட அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT