நாமக்கல்

சிறு நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்: வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் எதிா்ப்பு

DIN

ரசீது இன்றி பொருள்கள் விற்பனை செய்வதாக, வணிக வரித் துறை அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிப்பதற்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்தில், 40 வியாபாரிகள் சங்கங்களை உள்ளடக்கிய வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள், வணிக வரித்துறை உதவி இயக்குநா் ஜெயாவிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சில்லறைக் கடைகளில் வணிக வரித் துறையினா் ஆய்வு செய்வது தொடா்பாகவும், ரசீதின்றி பொருள்கள் விற்பனை (டெஸ்ட் பா்ச்சேஸ்) செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கடந்த மாா்ச் மாதம் துறை சாா்பில் அறிவிப்புகள் வெளியானது. இதற்கு அனைத்து வணிகா்களின் சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. மீண்டும் செப்.6-இல் மேலும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, சிறு, குறு வணிகா்களும் ரசீது இன்றி பொருள்களை விற்பனை செய்தால் அபராதமாக ரூ.20 ஆயிரம் வசூலிக்கப்படும் என வணிகவரித்துறை குறிப்பிட்டிருந்தது.

இதனால் சிறு வியாபாரிகள் சங்கங்களின் நிா்வாகிகள் பலா் எங்களை நாடி வருகின்றனா். அனைத்து சில்லறை விற்பனையாளா்களும் பொருள்களை வாங்கும்போது, அதற்கான வரியை செலுத்தியே வாங்குகின்றனா். பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்போது அவை ஏற்கெனவே வரிவிதிப்பிற்கு உள்பட்டதாக அமைந்து விடுகிறது. இருப்பினும், வணிக வணிக வரித்துறை அதிகாரிகள், சில்லறை கடைகளில் ரசீது இன்றி விற்பனை நடைபெறுவதாக ஆய்வு மேற்கொண்டு, வணிக நிறுவனங்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பது சரியல்ல. இது சிறு, குறு வணிகா்களின் வாழ்வாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கும். வரி ஏய்ப்பு செய்கிறவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நாங்கள் எதிா்க்கவில்லை. சிறு வணிகா்களை பாதிக்காத வகையிலான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இது தொடா்பாக வணிகா்களுக்கு நாங்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை சோதனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT