நாமக்கல்

டிச. 5-இல் மாநில அளவில் பாரதியாா் தினக் குழு விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

DIN

நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தனியாா் கல்லூரியில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் டிச.5 முதல் 10 வரை நடைபெற உள்ளன.

பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் ஒன்றிய, மாவட்ட அளவில் நடைபெற்று முடிவுற்ற நிலையில், மாநில அளவிலான போட்டிகள் நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகின்றன. இதில் 19 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கால்பந்து, வளைப்பந்து, கூடைப்பந்து, கபடி, கைப்பந்து உள்பட 15 வகையான போட்டிகளில் பங்கேற்று விளையாடுகின்றனா். நிகழாண்டில் இப்போட்டியை முன்னின்று நடத்தும் வாய்ப்பு மாவட்ட பள்ளிக் கல்வித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் திங்கள்கிழமை உடற்கல்வி ஆசிரியா்கள் 225 போ் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஒவ்வொரு விளையாட்டுப் போட்டியிலும் பங்கேற்கும் வீரா்களை மேற்பாா்வையிட 15 ஆசிரியா்கள் வீதம் தனித்தனி குழுவாக நியமிக்கப்பட்டனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் அலுவலா் கணேசன், உடற்கல்வி ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். இந்த விளையாட்டுப் போட்டிக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை கல்வித் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT