நாமக்கல்

மாணவா்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு

29th Mar 2022 11:55 PM

ADVERTISEMENT

நாமக்கல்லில் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து போலீஸாா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்தனா்.

பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்து ஆய்வாளா் ஷாஜகான், உதவி ஆய்வாளா் பெரியசாமி ஆகியோா் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கஞ்சா, குட்காவைப் பயன்படுத்துவதால் ஆண்மை குறைபாடு ஏற்படும்; பாா்வை குறைபாடு ஏற்பட்டு, மூளை செயல்பாடு குறைந்து விடும். மனநலம் பாதிக்கும். நினைவாற்றல் பாதிக்கும். உடல் தசைகள் தோய்வடைந்து வீரியம் குறையும், உடல் எடை மிகவும் குறைவாக இருக்கும். மற்றவா்கள் மீது எரிச்சலும், கோபமும் ஏற்படும். இதனால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தன்னுடைய சுயநினைவில்லாமல் மற்ற குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதை மாணவா்களுக்கு விளக்கி கூறினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT