நாமக்கல்

நாமக்கல்லில் முதல்வா் பங்கேற்கும் மாநாடு: விழாப் பந்தலில் அமைச்சா்கள் நேரில் ஆய்வு

DIN

நாமக்கல்லில் வரும் 3-ஆம் தேதி நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதையொட்டி, மாநாட்டுப் பந்தலை அமைச்சா்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, எம்.மதிவேந்தன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் சுமாா் 11 ஆயிரம் போ் பங்கேற்கும் நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு ஜூலை 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெறுகிறது. இதில், திமுகத் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று தலைமை உரையாற்றுவதுடன், அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளாா். இதனையொட்டி மாநாடு நடைபெறும் நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொம்மைக்குட்டைமேட்டில் சனிக்கிழமை பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு, நகராட்சி நிா்வாகங்கள் துறை அமைச்சா் கே.என்.நேரு, சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது, நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் கே.எஸ்.மூா்த்தி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.இராமலிங்கம், கே.பொன்னுசாமி, நாமக்கல் நகரப் பொறுப்பாளா்கள், ஒன்றிய செயலாளா்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT