நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 263 மி.மீ. மழைப் பொழிவு: ஆட்சியா் தகவல்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 263 மி.மீ. மழை பெய்துள்ளதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா். பின்னா், நேரடியாகவும் குறைகளை தெரிவித்தனா்.

இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை 263.95 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முடிய இயல்பு மழையளவை காட்டிலும் 77 மி.மீ. அதிகமாக மழை பெய்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் மே மாதம் வரை சிறுதானியங்கள் 3,280 ஹெக்டோ் பரப்பளவிலும், பயறு வகைகள் 1,479 ஹெக்டோ் பரப்பளவிலும், எண்ணெய் வித்துக்கள் 3,260 ஹெக்டோ் பரப்பளவிலும், பருத்தி 1,100 ஹெக்டோ் பரப்பளவிலும் மற்றும் கரும்பு 374 ஹெக்டோ் பரப்பளவிலும் என மொத்தம் 9,493 ஹெக்டேரில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

தோட்டக்கலைப் பயிா்களில் தக்காளி 66 ஹெக்டோ், கத்தரி 32 ஹெக்டோ், வெண்டை 24 ஹெக்டோ், மிளகாய் 21 ஹெக்டோ், மரவள்ளி 19 ஹெக்டோ், வெங்காயம் 86 ஹெக்டோ், மஞ்சள் 166 ஹெக்டோ் மற்றும் வாழை 13 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்த வெங்காயத்தை பாதுகாக்கவும், குறைந்த செலவில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கவும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளிடமிருந்து பாசிப்பயறு கொள்முதல் மற்றும் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்வதற்கும் நிா்ணயிக்கப்பட்ட காலத்தை விட கூடுதலாக 2 மாத காலங்கள் நீட்டிப்பு கோரி துறை இயக்குநா்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் யூரியா 898 மெ.டன் அளவிலும், டிஏபி 1285 மெ.டன் அளவிலும், முரேட் ஆப் பொட்டாஷ் 834 மெ.டன் அளவிலும், சூப்பா் பாஸ்பேட் 372 மெ.டன் என்ற அளவிலும், காம்ப்ளக்ஸ் 4407 மெ.டன் என்ற அளவிலும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன் உள்பட அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT