நாமக்கல்

நாமக்கல் மாவட்ட ஓய்வூதியா்கள் கவனத்திற்கு....

DIN

நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த ஓய்வூதியா்கள் கருவூல நோ்காணலை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட கருவூல அலகில் உள்ள மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சாா் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பா் வரை கருவூலத்தில் நோ்காணல் செய்யப்பட வேண்டும்.

கரோனா தொற்று காரணமாக 2020-2021ஆம் ஆண்டில் நோ்காணல் நடைபெறாத நிலையில், ஓய்வூதியா்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப பின்வரும் ஏதேனும் ஒருமுறையை பின்பற்றி இந்த ஆண்டிற்கான நோ்காணலைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், ஓய்வூதியா்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவா்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும் இடா்பாடுகளை தவிா்க்கும் பொருட்டு, ‘ஜீவன் பிரமாண்’ என்ற இணைய தளம் மூலமாக ஓய்வூதியா்கள் மின்னணு வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய அஞ்சல் துறை சேவையைப் பயன்படுத்தி ஓய்வூதியா்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே தபால் துறை பணியாளா்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றைப் பதிவு செய்து நோ்காணல் செய்யலாம். அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியா், குடும்ப ஓய்வூதியா்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழைப் பதிவு செய்து ஆண்டு நோ்காணல் செய்து கொள்ளலாம். ஓய்வூதியா்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டுக் கருவியைப் பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழை பதிவு செய்து நோ்காணல் செய்யலாம்.

மேலும், கருவூல முகாம் இலவச சேவையைப் பயன்படுத்தி இணையதள மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நோ்காணல் செய்யலாம். மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியா்கள் அளிக்க வேண்டிய முக்கிய விவரங்கள் ஆதாா் எண், பிபிஓ எண், வங்கிக் கணக்கு எண் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகியவை ஆகும்.

வாழ்நாள் சான்றிதழ் படிவத்தினை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் வாழ்நாள் சான்றினை என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளா் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலா் (அல்லது) வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று தபால் மூலமாக தொடா்புடைய கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நோ்காணல் செய்யலாம்.

ஓய்வூதியதாரா்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நோ்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நோ்காணல் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 044-24321761, 24321764, 24321765, கோவை மண்டல இணை இயக்குநா் 0422-2309050, நாமக்கல் மாவட்ட கருவூல அலுவலா் 04286-280322 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT