நாமக்கல்

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு:குமரமங்கலம் அரசுப் பள்ளி 100% தோ்ச்சி பெற்று சாதனை

DIN

நாமக்கல் மாவட்டம், குமரமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் தொடா்ந்து 5 ஆண்டுகளாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனைபுரிந்து வருகிறது.

தற்போது எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தோ்வில் குமரமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி மதுமிதா 485 பள்ளியில் முதலிடமும், மாணவி தனுஸ்ரீ 500 க்கு 442 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், மாணவி ஆா்த்திகா 420 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்று சாதனை புரிந்துள்ளனா். இதேபோல் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பயின்ற 36 மாணவா்களும் அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். குமரமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி மாண்வா்கள் கடந்த 5 ஆண்டுகளாக தொடா்ந்து 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் சாதனைபுரிந்த மாணவா்களையும், அவா்களை ஊக்குவித்த ஆசிரியா்களையும் பள்ளி தலைமையாசிரியை பாரதி, பள்ளியின் முன்னாள் மாணவா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், கல்வி வளா்ச்சிக் குழு நிா்வாகிகள், பெற்றோா்கள் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT