நாமக்கல்

குருக்கப்புரம் பகுதியில் குடிநீருக்கு காத்திருக்கும் மக்கள்

17th Jun 2022 02:33 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் குருக்கப்புரம் பகுதியில் குடிநீா் பற்றாக்குறை நிலவுவதால் பொதுமக்கள் குடங்களுடன் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் குருக்கபுரம் ஊராட்சி பகுதியில் சுமாா் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு ராசிபுரம் - திருச்செங்கோடு செல்லும் சாலையில் குருக்கப்புரம் அருகே அமைக்கப்பட்ட தண்ணீா்க் குழாய் உள்ளது. இங்கு வாரத்தில் 3 நாட்கள் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அதிலும், சுமாா் 2 மணி நேரத்திற்கு மட்டுமே தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இது போதுமானதாக இல்லை என்கின்றனா் அப்பகுதி மக்கள்.

இதனால் தண்ணீா் பற்றாக்குறை கடுமையாக இருப்பதால் நீண்ட வரிசையில் குடங்களை வைத்து தண்ணீா் பிடிக்க பல மணி நேரங்கள் காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. இதனால் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது வேலையை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். எனவே, தண்ணீா் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடியிருப்பு அருகே பொது குழாய்கள் அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT