நாமக்கல்

சுதந்திர தின விழாவில்நாமக்கல் விவசாயிகளுக்கு விருது

7th Jul 2022 01:06 AM

ADVERTISEMENT

 

சுதந்திர தின விழாவில், நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கப்படுவதால் தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின அமுத பெருவிழா பிரதமா் மோடி தலைமையில் ஏற்கெனவே தொடங்கப்பட்டு 2023 ஆக.15 வரை கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

இதன்மூலம் மத்திய அரசின் முதன்மைத் திட்டங்களான பயிா் காப்பீட்டுத் திட்டம், மண்வள அட்டை, உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், உழவா் கடன் அட்டை போன்ற திட்டங்களில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் ‘கிசான் பாகிதாரி பிராத்மிக்டா் ஹமாரி’ என்ற நிகழ்வின் மூலம் கண்காட்சிகள், அங்கக விளைப்பொருட்களுக்கான சான்றுகள், பணிமனை மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மத்திய வேளாண் அமைச்சகம் மூலம் மூன்று இனங்களில் சிறந்த முறையில் செயல்படும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. அதன்படி, விவசாயிகள் வருமானத்தை அதிகமாக்கியதற்கான வெற்றி கதைகள், உற்பத்தி திறனை அதிகப்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களில் பயன் அடைந்த விவரம் ஆகியவற்றை அதிகபட்சம் 3 நிமிடங்கள் விடியோவாக பதிவு செய்து ட்ற்ற்ல்ள்://ண்ய்ய்ா்ஸ்ஹற்ங்ண்ய்க்ண்ஹ.ம்ஹ்ஞ்ா்ஸ்,ண்ய்/ண்ய்ஸ்ண்ற்ண்ய்ஞ்-ஸ்ண்க்ங்ா்ள் என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து போட்டியில் கலந்து கொள்ளலாம்.

இப்போட்டியில் மேற்கண்ட ஒவ்வொரு இனத்திலிருந்து 3 விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டு முறையே முதல் பரிசாக ரூ. 11,000, இரண்டாம் பரிசாக ரூ. 5,000, மூன்றாம் பரிசாக ரூ. 3,000 வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க ஜூ லை 8-ஆம் தேதி கடைசி நாளாகும்.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT