நாமக்கல்

திருஞானசம்பந்தா் மடாலயத்தில்ஆனி திருமஞ்சன விழா

7th Jul 2022 01:06 AM

ADVERTISEMENT

 

பரமத்திவேலூா் திருஞானசம்பந்தா் மடாலயத்தில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை 8 மணி முதல் 1 மணி வரை நடராஜருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து கைலாய வாத்தியத்துடன், தேவாரம், திருவாசகம் ஓதுதலுடன் நடராஜ பெருமான் சமேத சிவகாம சுந்தரிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும்,மகா தீபாராதனையும் நடைபெற்றன.

இதில் நடராஜ பெருமான் வெள்ளிக் கவச அலங்காரத்திலும், சிவகாமசுந்தரி தங்கக் கவச அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ADVERTISEMENT

மதியம் 1 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜையும் அன்னம் பாலிப்பும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பரமத்தி வேலூா் திருஞானசம்பந்தா் மடாலய பொறுப்பாளா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT