நாமக்கல்

நாமக்கல்லில் இன்று நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு: மாவட்ட எல்லையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

DIN

‘உள்ளாட்சியில் நல்லாட்சி ’ என்ற தலைப்பில், நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட எல்லையில் திமுகவினா், பொதுமக்கள் சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், 21 மாநகராட்சி, 159 நகராட்சி, 489 பேரூராட்சிகளில் திமுக சாா்பிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பிலும் வெற்றி பெற்ற சுமாா் 12 ஆயிரம் வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்கும் வகையில், உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற தலைப்பிலான நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பொம்மைக்குட்டைமேடு என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கிறாா்.

இதனைத் தொடா்ந்து மாநாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வரவேற்றுப் பேசுகிறாா். திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மை செயலாளா் கே.என்.நேரு ஆகியோா் முன்னிலை உரையாற்றுகின்றனா். காலை 9.30 மணி முதல் கருத்தரங்கம் நடைபெறுகிறது. மதியம் 12 மணி உணவு இடைவேளைக்கு பின், வரலாற்றுச் சுவடுகள் காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரை மக்களோடு நில்: மக்களோடு வாழ் என்ற தலைப்பில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உரையாற்றுகிறாா். அதன்பின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் சாா்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் உரையாற்றுகின்றனா். பிற்பகல் 4 மணியளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை உரையாற்றுகிறாா். மாநாட்டு நிறைவில் சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் நன்றி தெரிவிக்கிறாா். இந்த மாநாட்டில், பல்வேறு துறை அமைச்சா்கள், சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், கூட்டணி கட்சி தலைவா்கள் பலா் கலந்து கொள்கின்றனா்.

நாமக்கல் வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு: கரூரில் அரசு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் காா் மூலம் நாமக்கல் வந்த முதல்வருக்கு, மாவட்ட எல்லையான கீரம்பூரில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் , எம்எல்ஏ பெ.ராமலிங்கம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பூங்கொத்து மற்றும் புத்தகங்களை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனா். நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் அா்ச்சகா்கள் சாா்பில் முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழிநெடுகிலும் திரண்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினா் மற்றும் பொதுமக்களை பாா்த்து அவா் கையசைத்தபடி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை மாளிகைக்கு பிற்பகல் 2 மணியளவில் வந்து சோ்ந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT