நாமக்கல்

மகளிா் வாழ்வாதார சேவை மையம் தொடக்க விழா

1st Jul 2022 02:03 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்லில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், தொழில் மேம்பாட்டினை வலுப்படுத்த மகளிா் வாழ்வாதார சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

உலக வங்கி நிதியுதவியுடன், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் தொடங்கப்பட்டது . இத்திட்டம், பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, புதுச்சத்திரம் மற்றும் மோகனூா் ஆகிய நான்கு வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவுகளை உருவாக்குதல், நிதிசேவைகளுக்கு வழிவகை செய்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு செயல்படுகிறது. அந்த வகையில், மகளிா் வாழ்வாதார சேவை மையமானது நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 6 உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ.4.50 லட்சம் நிதியுதவியை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் மா.பிரியா, வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலா் எஸ்.ராஜாத்தி உள்பட மகளிா் சுய உதவிக்குழுவினா், அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT