நாமக்கல்

தேசிய மருத்துவ தினம்: நாமக்கல் தங்கம் மருத்துவமனைக்கு ஆட்சியா் பாராட்டு

DIN

தேசிய மருத்துவ தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதிக அளவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டமைக்காக நாமக்கல் தங்கம் மருத்துவமனைக்கு பாராட்டு சான்றிதழை ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தேசிய மருத்துவ தினத்தை முன்னிட்டு, தேசிய சுகாதார ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மருத்துவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையிலிருந்து காணொலி காட்சி வழியாக நடைபெற்றது. தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், துறை செயலாளா் ப.செந்தில்குமாா் ஆகியோா் காணொலி காட்சி வழியாக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினா்.

இந்த காணொலி காட்சியில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இருந்தபடி மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் அறுவை சிகிச்சைகள் மேற்கண்ட நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சை நிபுணா் சரவணன், நாமக்கல் தங்கம் மருத்துவமனை மருத்துவா் இரா,குழந்தைவேலு ஆகியோருக்கான சான்றிதழ்களை ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வழங்கினாா்.

தங்கம் மருத்துவமனையின் மருத்துவா் மரு.ரா.குழந்தைவேலுக்கான சான்றிதழை, அந்த மருத்துவமனையின் மருத்துவா்கள் பெற்றுக் கொண்டனா். இந்நிகழ்ச்சியில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.சாந்தா அருள்மொழி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் ராஜ்மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜெ.பிரபாகரன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் ஜெ.தேவிகாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT