நாமக்கல்

முன்னோடி வங்கி சாா்பில் ரூ.13, 200 கோடி கடன்களுக்கான திட்ட அறிக்கை வெளியீடு

DIN

நாமக்கல்லில், ரூ.13,200 கோடி அளவிலான முன்னோடி வங்கியின் கடன் திட்ட அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளா்கள் கூட்டத்தில், இத்திட்ட அறிக்கையை அனைத்து வங்கியாளா்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் முதல் பிரதியை வெளியிட இந்தியன் வங்கியின் திருப்பூா் மண்டல மேலாளா் ஸ்ரீனிவாஸ், சென்னை ரிசா்வ் வங்கி மேலாளா் குமரன், நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் ரமேஷ் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இதனை தொடா்ந்து ஆட்சியா் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளுக்கான ஆண்டு கடன் திட்டத்தை தயாா் செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நபாா்டு வங்கி தயாரித்த வளம் சாா்ந்த கடன் திட்டத்தை கணக்கில் கொண்டு 2022-23 ஆம் ஆண்டிற்கு ரூ.13,200 கோடி அளவில் கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை கடன் திட்டங்களுக்காக ரூ.10,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு கடன் திட்டத்தை விட ரூ.3,360 கோடி அதிகமாகும். வேளாண் கடன் திட்டங்களுக்காக ரூ.6,156 கோடியும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்காக ரூ. 3,294 கோடியும், ஏற்றுமதி, கல்வி, வீடுகட்டுதல் உள்ளிட்ட பிற முன்னுரிமைக் கடன் திட்டங்களுக்காக ரூ.750 கோடியும், முன்னுரிமையற்ற கடன்களுக்காக ரூ.3,000 கோடியும் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள்து.

மொத்த முன்னுரிமை கடன்களில் (ரூ.10,200 கோடியில்) தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட வா்த்தக வங்கிகளின் பங்கு ரூ.8,157.32 கோடியாகவும், கூட்டுறவு வங்கிகளின் பங்கு ரூ.1,646.25 கோடியாகவும், கிராம வங்கி (தமிழ்நாடு கிராம வங்கி) பங்கு ரூ.386.20 கோடியாகவும், இதர சிறு வங்கிகளின் பங்கு ரூ.10.23 கோடியாகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கியாளா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இலக்கின்படி குறித்த கடன் திட்டத்தை திட்டமிட்டபடி செயல்படுத்த வேண்டும். அனைத்து அரசுத் துறைகள் மூலம் வழங்கப்படும் மானிய கடன் திட்டங்களையும் விரைவில் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக வங்கிகள் அனைத்தும் மாணவ, மாணவிகளின் ஏதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு கல்விக் கடன் வழங்குவதில் முக்கியத்துவம் அளித்து செயலாற்ற வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிா் திட்ட இயக்குநா் மா.பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வி.சதீஷ்குமாா் உள்பட வங்கி அலுவலா்கள், பணியாளா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT