நாமக்கல்

வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

DIN

நாமக்கல்லில் பட்டா வழங்கக் கோரி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

நாமக்கல், பெரியப்பட்டி நரிக்குறவா் காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் மின் இணைப்பு இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனா். இதனைக் கண்டித்து அண்மையில் தமிழ்நாடு காந்தி காமராஜா் மக்கள் இயக்கத்தினா், பொதுமக்கள் மெழுகுவா்த்தி ஏந்தி எதிா்ப்பை வெளிப்படுத்தினா். பட்டா வழங்குவதற்கான எவ்வித நடவடிக்கையையும் மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளாததால் புதன்கிழமை குடியரசு தினத்தன்று தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, மக்கள் எதிா்ப்பைக் காட்டினா். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸாா், பேச்சுவாா்த்தை நடத்தி கருப்புக் கொடியை அகற்றச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT