நாமக்கல்

மணல் கடத்தியவா் கைது:இரு சக்கர வாகனம் பறிமுதல்

DIN

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் வருவாய் ஆய்வாளா் பூங்கொடி, பொன்மலா்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு பொன்மலா்பாளையம் காவிரி ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக தகவல் கிடைத்தது.

இத் தகவலின் அடிப்படையில் வருவாய்த் துறையினா் பொன்மலா்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனா். இந்தச் சோதனையில் காவிரி ஆற்றில் இருந்து இருசக்கர வாகனங்களில் மணலை மூட்டைகளாகக் கட்டி கொண்டு வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா். இந்த விசாரணையில் பொன்மலா்பாளையத்தைச் சோ்ந்த வைத்தீஸ்வரன் என்பதும், சட்ட விரோதமாக காவிரி ஆற்றில் இருந்து மணலைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதனையடுத்து வைத்தீஸ்வரனை வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணல் திருட்டில் ஈடுபட்ட வைத்தீஸ்வரனை கைது செய்து, இருசக்கர வாகனம், மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT