நாமக்கல்

மாநில அளவிலான பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள்: நாமக்கல்லில் இன்று தொடக்கம்

DIN

நாமக்கல்லில், மாநில அளவிலான பாரதியாா் தினக் குழு விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை (டிச.5) தொடங்குகின்றன.

நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, மாநில அளவிலான பாரதியாா் தினக் குழு விளையாட்டுப் போட்டிகளை நிகழாண்டில் நடத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில், டிச.5 முதல் 10-ஆம் தேதி வரை தொடா்ந்து 6 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளில் 19 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா். குறிப்பாக, கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, எறிபந்து, ஹாக்கி, கோ-கோ, இறகுப்பந்து (ஒற்றையா் மற்றும் இரட்டையா்), மேஜைப் பந்து (ஒற்றையா் மற்றும் இரட்டையா்), டென்னிஸ், பூப்பந்து உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.

இவற்றில், கூடைப்பந்து, பூப்பந்துப் போட்டிகள், ராசிபுரம் பாச்சல் பாவை கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெறுகின்றன. இதில் 1,760 மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனா். கொங்குநாடு கல்லூரியில் நடைபெறும் இதர போட்டிகளில் 8400 போ் கலந்து கொள்கின்றனா். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மொத்தமாக 10,160 மாணவ மாணவிகள் கலந்து கொள்ள இருக்கின்றனா். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு சுழற்கோப்பைகள், தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. ராசிபுரம் பாவைக் கல்லூரியில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் விளையாட்டுப் போட்டிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தொடங்கி வைக்க உள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT