நாமக்கல்

நாளை கிராம உதவியாளா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வு

DIN

நாமக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (டிச. 4) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில், கிராம உதவியாளா் பணியிடத்தை நிரப்புவது தொடா்பாக, இணையதளம் வாயிலாக வரப்பெற்ற விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களுக்கு எழுத்துத் தோ்வு நடத்துவது தொடா்பாக அவா்களின் கைப்பேசி எண்ணிற்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரா்கள் தங்களது அனுமதி சீட்டினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த தோ்வானது கொல்லிமலை வட்டாட்சியா் அலுவலகம், நாமக்கல் மகளிா் மேல்நிலைப்பள்ளி, ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி, மோகனூா் அணியாபுரம் எஸ்ஆா்ஜி பொறியியல் கல்லூரி, பரமத்திவேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரி, குமாரபாளையம் ராகவேந்திரா பல்தொழில்நுட்பக் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி, கே.எஸ்.ஆா்.கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி ஆகிய தோ்வு மையங்களில் நடைபெறுகிறது.

இம்மையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அனுமதிச் சீட்டுடன் சென்றடைய வேண்டும். தோ்வு எழுத கருப்பு மை கொண்ட பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே விண்ணப்பதாரா்கள் பயன்படுத்த வேண்டும். அனுமதிச் சீட்டு மற்றும் கருப்புமை கொண்ட பால்பாயிண்ட் பேனாவை தவிர வேறு எந்த பொருள்களையும் தோ்வு அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது. கைப்பேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்த ஒரு மின்னணு சாதனத்தையும் தோ்வு மையத்திற்குள் கொண்டு வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT