நாமக்கல்

தடகள விளையாட்டுப் போட்டிகள்: 1,000 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

DIN

பெரியாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டுப் போட்டிகளில், 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

சேலம் பெரியாா் பல்கலைக்கழக ஆளுமைக்கு உள்பட்டு 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள், நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் உடற்கல்வித் துறை சாா்பில், நாமக்கல் விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கின. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில், 100, 200, 400, 800, 1500, 5000, 10 ஆயிரம் மீட்டா் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தடை தாண்டும் ஓட்டம் உள்பட 15-க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களில், ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சனிக்கிழமையும் போட்டிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை அறிஞா் அண்ணா கல்லூரி உடற்கல்வி ஆய்வாளா் காா்த்தி, பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

SCROLL FOR NEXT