நாமக்கல்

அனிச்சம்பாளையம்-நன்செய் புகளூா் கதவணை திட்டம்:கூடுதல் தலைமைச் செயலாளா் ஆய்வு

DIN

பரமத்தி வேலூா் அருகே அனிச்சம்பாளையத்தில் இருந்து கரூா் மாவட்டம்- நன்செய் புகளூா் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணை திட்டப் பணிகளை நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் டாக்டா் சந்தீப்சக்சேனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இக்கதவணை கட்டும் பணி காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 406.50 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த கதவனை 0.8 டி.எம்.சி. தண்ணீா் சேமிக்கும் வகையில் கட்டப்படுகிறது.

இதன்மூலம் கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் வலதுபுறம் உள்ள வாங்கல் வாய்க்கால் மூலம் 1,458 ஏக்கா் பாசன நிலங்களும், இடதுபுறம் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டம்- மோகனூா் வாய்க்கால் மூலம் 2,583 ஏக்கா் பாசன நிலங்களும் பாசன வசதி பெறும். பணிகள் 40 சதவீதத்துக்கும் மேல் நிறைவு பெற்றுள்ளன.

இப் பணிகளை தமிழக அரசின் நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் டாக்டா் சந்தீப் சக்சேனா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது தரம், பணி முன்னேற்றம், முடிக்க வேண்டிய காலம் குறித்து பொறியாளா்களிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். ஆய்வின்போது கரூா் ஆட்சியா் டாக்டா் பிரபு சங்கா், நீா்வள ஆதாரத் துறை தலைமை பொறியாளா் இராமமூா்த்தி, கண்காணிப்பு பொறியாளா் சுப்பிரமணியன், சிறப்பு திட்ட செயற்பொறியாளா் சாரா, உதவி செயற் பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், விவசாயிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT