நாமக்கல்

கோழிகளின் தீவன எடுப்பு அதிகரிக்கத் தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்

DIN

பண்ணைகளில் கோழிகளின் தீவன எடுப்பு அதிகரிக்கத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 மற்றும் 68 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. அடுத்த நான்கு நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை மாவட்டத்தின் சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கு மற்றும் தென் மேற்கிலிருந்து மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: நாமக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய சிறு மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் சற்று அதிக அளவில் காணப்படும். அதன் காரணமாக வெப்பச்சலனம் ஏற்பட்டு, மாவட்டத்தின் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். தென்மேற்குப் பருவமழையின் தற்காலிக ஆற்றலற்ற தன்மையால் வெப்ப அளவுகள் குறைந்தே காணப்படும். கோழிகளில் இதுவரை காணப்பட்ட குறைந்த தீவன எடுப்பு அளவுகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும். இதன் காரணமாக, இளம் கோழிகளில் நல்ல அளவில் முட்டை உற்பத்தியும், முட்டையின் எடை மற்றும் அளவும் உயா்ந்து காணப்படும். இவ்வாறான நல்ல உற்பத்தியில் கோழிகளின் நோய் எதிா்ப்பு சக்தியினை காப்பாற்றி, முட்டை உற்பத்தி சரிவு ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.

கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதித்ததில் பெரும்பாலும் வெப்ப அயா்ச்சி மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் வெயில் நேரங்களில் தெளிப்பான் உபயோகிக்க வேண்டும். மேலும், தீவனத்தில் வைட்டமின் சி, குரோமியம் மற்றும் இதர நுண்ணூட்டச் சத்துக்களை, உபயோகப்படுத்தி வெப்ப அயா்ச்சியை குறைத்திடவும் நல்ல தரமான, சரிவிகித தீவனமளித்து கல்லீரல் பாதிப்பினை தடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT