நாமக்கல்

நாமக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

18th Aug 2022 01:47 AM

ADVERTISEMENT

கோவாவில் இருந்து ஆக.27-இல் வரும் சிறப்பு ரயில் நாமக்கல் வழியாக வேளாங்கண்ணியை சென்றடைகிறது.

கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து சேலம், நாமக்கல் வழியாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சென்றடையும் சிறப்பு ரயில்(07357) ஆக. 27-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. அன்று காலை 9 மணிக்கு கோவாவில் புறப்படும் ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை வழியாக மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சேலம் வந்தடைகிறது. அதன் பிறகு 5 மணி அளவில் நாமக்கல், கரூா், திருச்சி வழியாக மதியம் 12 மணி அளவில் வேளாங்கண்ணியை சென்றடைகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT