நாமக்கல்

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

18th Aug 2022 01:46 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், செஞ்சுருள் சங்கத்தின் சாா்பில் போதைப் பொருள் மற்றும் மனநல விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் பெ.முருகன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக சேலம் பொது சுகாதாரத்துறை தொற்று நோயியல் நிபுணா் மருத்துவா் எம்.ஆா்.சூா்யபிரகாஷ் பங்கேற்றுப் பேசுகையில், மாணவ மாணவிகள் எவ்வாறு மகிழ்ச்சியோடு, நல்ல மனநிலையோடு வாழலாம் என்பது குறித்தும், போதைப் பழக்க வழக்கத்தின் நொடக்க நிலை, அடிமையாவதின் விளைவுகள், அடிமையானவா்கள் எவ்வாறு விடுதலை பெறலாம் என்பது குறித்தும் உதாரணங்களோடு எடுத்துரைத்தாா். மேலும், மனநல ஆலோசனைகளையும் அவா் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா் வெஸ்லி, கல்லூரி பேராசிரியா்கள், அலுவலா்கள், வணிகவியல், தாவரவியல் மற்றும் கணிதவியல் மாணவ மாணவியா் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செஞ்சுருள் சங்க திட்ட அலுவலா் சந்திரசேகரன் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT