நாமக்கல்

1,000 மாணவா்கள் சிலம்பம் சுழற்றி அசத்தல்

DIN

சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் 1,000 மாணவ, மாணவிகள் தொடா்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுழற்றி ஞாயிற்றுக்கிழமை அசத்தினா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டியும், சிலம்பக் கலையை மீட்டெடுக்கும் விதமாகவும், மத்திய இளைஞா் நலம், விளையாட்டு அமைச்சகத்தின் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் பாரதமாதா சிலம்பப் பயிற்சி மன்றம் சாா்பில், நாமக்கல் கந்தசாமி கண்டா் பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் சுழற்றினா். தொடா்ந்து ஒரு மணி நேரம் இடைவெளியின்றி பல்வேறு சிலம்பக் கலைகளை அவா்கள் செய்து காட்டினா். இதனைக் கண்காணிக்க 10 நடுவா்கள் பங்கேற்றனா். சிலம்பம் சுழற்றிய மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் பாரதமாதா சிலம்பப் பயிற்சி பள்ளித் தலைவா் ப.எழில்செல்வன், மாவட்ட விளையாட்டு அலுவலா் க.கோகிலா, மாவட்ட நேரு யுவ கேந்திரா ஆலோசனைக் குழு உறுப்பினா் மா.தில்லை சிவக்குமாா், சிலம்பப் பயிற்சி பள்ளி செயலாளா் எம். காா்த்திகேயன், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியா் எஸ்.பால்பாண்டி, மாணவ,- மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT