நாமக்கல்

தேசியக் கொடியை அவமதிக்காதவாறு வீடுகளில் மரியாதையுடன் இன்று ஏற்ற வேண்டும்: ஆட்சியா்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் தேசியக் கொடியை தகுந்த மரியாதையுடன், அவமதிக்காத வகையில் சனிக்கிழமை முதல் அனைவரது வீடுகளிலும் ஏற்ற வேண்டும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டின் 75-ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ஆக.13 முதல் 15 வரை மூன்று நாள்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். இதற்காக மாவட்ட நிா்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மகளிா் சுய உதவிக்குழுவினா் மூலம் குறைந்த விலையில் தரமான தேசியக் கொடிகள் உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தும் வகையில் அந்தந்த கிராம ஊராட்சிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி குறைந்த விலையில் தரமான தேசியக் கொடியை பெற்று தங்களது வீடுகளில் பறக்கவிட வேண்டும்.

நமது தேசியக் கொடி மிகுந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியதாகும். அதனை அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தகுந்த மரியாதையுடன் ஏற்றிட வேண்டும். வீட்டின் மேற்புறத்தில் மட்டுமே பறக்க விடவேண்டும். ஆக.15-ஆம் தேதி வரை தொடா்ந்து கம்பத்திலேயே கட்டியிருக்க அரசு அனுமதித்துள்ளது. சுதந்திர தினத்தன்று மாலை 6 மணிக்கு மேல் தேசியக் கொடியினை இறக்கி மடித்து வீட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஊராட்சிப் பகுதியில் அரசு கட்டடங்கள் அனைத்திலும் தேசியக் கொடியினை பறக்க விட்டு மரியாதை செலுத்த வேண்டும். ஊராட்சி மன்ற அலுவலகங்களில் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் மட்டுமே கொடியேற்ற வேண்டும். தேசியக்கொடிகளை நேராக மட்டுமே பறக்க விட வேண்டும், சாய்வாக பறக்கவிடக் கூடாது. மலா்கள் உள்பட எந்தப் பொருளையும் வைக்கக் கூடாது. தலையணை உறையாக பயன்படுத்தக் கூடாது. முகக்கவசமாக அணியக் கூடாது.

அழுக்கடைந்த தேசியக்கொடியினை யாரும் பயன்படுத்தக் கூடாது. தரையினை தொடும் வகையில் தாழ்வாக பறக்கவிடக் கூடாது .

தேசியக் கொடியின் மீது கால்கள் படக்கூடாது, கயிறாக பயன்படுத்தக்கூடாது. தேசியக் கொடியினை பயன்படுத்திய பிறகு அழகான முறையில் மடித்து பத்திரமாக வைக்க வேண்டும். கசக்கியோ, சுருட்டியோ வைக்கக் கூடாது. தேசியக் கொடியினை அனைவரது வீடுகளிலும் ஏற்றி இந்திய சுதந்திரத்தினையும் அதற்காக பாடுபட்ட தியாகிகளையும் நினைவில் கொள்வோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT